ஈழத்தமிழர்களுக்காகப் பொங்கிய ராம் ஜெத்மலானி!
ஈழப்பிரச்சனை டெல்லி மற்றும் வடமாநிலங்களிலும் இப்போது எதிரொலிக் கிறது. ஈழப்போரின்போது தமிழர்கள் பட்ட அவலம் மற்றும் சேனல்4 தொலைக் காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தையும் வைத்து #வைகோ தொகுத்த சி.டி.இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளி வந்துள்ளன.
அனைத்து மாநிலத் தலைநகரங் களிலும் இவற்றை வெளியிடும் காரியத்தை வைகோ தொடங்கி உள்ளார். இதற்கான விழா கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் நடந்தது.அன்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் என்பதால், உணர்ச்சி மயமாக இருந்தது அரங்கம்.