Thursday, July 18, 2013

சாஞ்சி அறப்போர்-பகுதி 2

என் இனிய தோழர்களே,

நாகபுரியில்,தீக்ஷா பூமியில் அமைக்கப்பட்டு இருக்கின்ற அந்த ஸ்தூபா,சாஞ்சி யில் மாமன்னர் அசோகர் கட்டி எழுப்பிய ஸ்தூபாவின் வடிவமைப் பிலேயே கட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதற்கு உள்ளே இருக்கின்ற தியான அரங் கத்தைப் போல, உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்கின்றசெய்தியைப் பார்த்தோம். அந்த ஸ்தூபாவுக்குஉள்ளே சென்றோம். விரலைச் சொடுக்கி ஓசை எழுப்பினால் அதிர்கிறது.

புத்தரின் போதனைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற கொலைகாரன், எங் கள் குழந்தைகளை, எங்கள் தாய்மார்களை, எங்கள் சகோதரிகளைக் கொன்று குவித்த கொடியவனை, புத்தர் விழாவுக்கு அழைத்து வருகின்றீர்கள்.ஏ...பாரதிய ஜனதா கட்சியே, உன் கோர முகத்தை நாங்கள் அம்பலப் படுத்துகின்றோம். இந்துக்களுக்காக நீ கட்சி நடத்துகிறாயா?

திராவிட இயக்கச் செம்மல் என்.வி.நடராசன்

“திராவிடர் கழகத்தில் இருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக தன்னலமற்று தம் மையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்தவர் என்.வி.என்.! தந்தை பெரியார் அவர்கள், அவர் மீது பேரன்பைப் பொழிந்ததோடு, நிற்க வில்லை. பெருநம்பிக் கையும் வைத்து இருந்தார். எந்த அளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ, என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும்
அளவுக்கு. போராட்டங்களிலே ஈடுபட்டு சிறைக்கோட்டம் செல்வதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் நடராசன்.‘கொள்’ என்றால், வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால், வாயை மூடிக்கொள்வதும் குதிரைகளுக்கு மட்டுமே சொந்தமான இயல்பு இல்லை. சில சந்தர்ப்பவாத அரசியல்வாதி களிடமும் அந்தப் போக்கு உண்டு.அவர்கள் ஆர்ப்பாட்டமாக மேடையில் முழங்குவார்கள். ஆனால், போர்ப் பரணி கேட்டதுமே எங்கேனும் புதரில் போய் பதுங்குவார்கள். என்.வி. என். அத்தகைய கோழை அல்லர், கொள்கைக் குன்று!” என்று நம் நெஞ்சம் நிறை அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டிப் பெருமைப்படுத்தப்பட்டவர் திராவிடர் இயக்க தியாகச் செம்மல் என்.வி. நடராசன் அவர்கள்.

Wednesday, July 17, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 4

ஆம். இந்தத் திருவாசகம் எப்படி வந்தது?

தமிழில், சைவ இலக்கியத்தில் பன்னிரு திரு முறைகள் உண்டு. பன்னிரு திரு முறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்த ரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தந்தவை. எட்டாவது திருமுறை மாணிக்கவாச கரின் திருவாசகம் - முதல் பகுதி திருவாசகம்; இரண்டாம் பகுதி திருக்கோவை யார்! ஒன்பதாவது திருமுறை ஒன்பது அடியார்கள் தந்த திருமுறைகள்.திரு மாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், சேதுராயர், கண்டரா தித்தர், பூந்துருத்திக் காடநம்பி,புருடோத்தம நம்பி,திருவாழிய அமுதனார், வேணாட்டு அடிகள் என்று ஒன்பது அடியார்கள் தீட்டியதுதான் ஒன்பதாம் திருமுறை. பத் தாம் திருமுறை திருமூலர் தந்த திருமந்திரம். 11-ஆம் திருமுறை காரைக்கால் அம்மையார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி இவர்கள் தந்தவை. 12-ஆம் திருமுறை சேக்கிழார் தந்த ‘பெரியபுராணம்’. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளின் அடிப்படையும் ‘நம சிவாய’ என்ற ஐந்து எழுத்துதான். இந்த ‘நமசிவாய’ என்ற ஐந்து எழுத்தை வைத்துத்தான் சிவபுராணத்தைத் தொடங்குகிறார் மாணிக்கவாசகர். இவரது திருவாசகத் தைப் பற்றி வடலூர் வள்ளலார் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை இராமலிங்க அடிகளார் கூறும் போது,

சாஞ்சி அறப்போர்-பகுதி 1

ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சே, மத்தியப் பிர தேசம் -சாஞ்சிக்கு வருவதைக் கண்டித்து, கருப்புக்கொடி அறப்போர் நடத்திட, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சாஞ்சிக்கு அணிவகுத்துச்
சென்ற கழகத்தோழர்கள் 23.09.2012 அன்று சென்னை வந்தடைந்தனர். பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை....

அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே,

பேரறிஞர் அண்ணா அவர்களின் சதுக்கத்தில், சரியாக ஏழு நாள்களுக்கு முன்பு, அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளாம் செப்டெம்பர் 17 அன்று,அந்தி
சாய் வதற்கு முன்பாக, இதே இடத்தில் சூளுரைத்து, நானும், ஆயிரத்துக்கும் மேற் பட்ட கழகத்தின் கண்மணிகளும், தமிழ் ஈழ விடியலுக்காக ஏங்குகின்ற தமிழ் உணர்வாளர்களும், மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில், புத்தருடைய
போதனைகளைப் பரப்ப அமைக்கப்படுகின்ற ஆராய்ச்சிக் கல்லூரிக்கு அடிக் கல் நாட்டுவதற்கு,தமிழ் இனப் படுகொலை செய்த, இலங்கையின் சிங்கள அதிபர், மகிந்த ராஜபக்சே வருவதை எதிர்த்துப் போராடப் புறப்பட்டுச் சென் றோம்.

திப்பு சுல்தானும் மது ஒழிப்பும்!

மதங்களைக் கடந்து மனித நேயத்தோடு ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் மதுவை
அடியோடு வெறுத்தார். திப்புவின் வருவாய்த்துறை சட்டம் (1787) மது  ஒழிப்பைக் கூறுகிறது.

நமது மக்களின் சமுதாய, ஆன்மிக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும். வெளிநாட்டினர்க்கு தேவை
யானால் மது அனுமதி வழங்கப்படலாம்.

மீர்சாதிக்கு திப்பு 1787 இல் கடிதம் எழுதினார். “மது விற்பனையாளர்கள் தமது தொழிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் செய்து கையொப்பம்  வாங்கியுள்ள தாக உங்கள் அறிக்கை தெரிவிக்கிறது. மதுவை முற்றாக ஒழிக்க மது காய்ச் சுபவர்களிடமும் இத்தகைய ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்குவது அவசியம். பின்னர் அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்க உதவு வதும் அவசியம்.