Showing posts with label சாஞ்சி. Show all posts
Showing posts with label சாஞ்சி. Show all posts

Saturday, August 3, 2013

சாஞ்சி அறப்போர்-பகுதி 3

நான் உரை ஆற்றத் தொடங்கினேன்.காரணங்களைச் சொன்னேன்.எதனால், கொலைகாரன் இராஜபக்சே இங்கே வரக்கூடாது என நாங்கள் எதிர்க்கின் றோம்? என்பதைச் சொன்னேன். என் இருதயத்தைத் திறந்து பேசினேன்.அங்கே கொல்லப் பட்டது உங்கள் குழந்தைகளாக இருந்தால், உங்கள் மனம் என்ன
பாடுபடும்? என்று கேட்டேன்.

இந்திய அரசைக் குற்றம் சாட்டினேன். கொலைகாரன் ராஜபக்சே, காலையில்
குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தான். இன் றைக்கு அவர் குடியரசுத் தலைவராக இருக்கலாம். நான்,அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன். சிங்களவனுக்கு ஆயு தங்களும், பணமும் கொடுத்து, எங்கள் மக்களைக் கொன்று குவித்ததை நியா யப்படுத்த முயன்ற அந்தக் கொடிய காரியத்தைச் செய்த அந்நாள் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன்.

Thursday, July 18, 2013

சாஞ்சி அறப்போர்-பகுதி 2

என் இனிய தோழர்களே,

நாகபுரியில்,தீக்ஷா பூமியில் அமைக்கப்பட்டு இருக்கின்ற அந்த ஸ்தூபா,சாஞ்சி யில் மாமன்னர் அசோகர் கட்டி எழுப்பிய ஸ்தூபாவின் வடிவமைப் பிலேயே கட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதற்கு உள்ளே இருக்கின்ற தியான அரங் கத்தைப் போல, உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்கின்றசெய்தியைப் பார்த்தோம். அந்த ஸ்தூபாவுக்குஉள்ளே சென்றோம். விரலைச் சொடுக்கி ஓசை எழுப்பினால் அதிர்கிறது.

புத்தரின் போதனைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற கொலைகாரன், எங் கள் குழந்தைகளை, எங்கள் தாய்மார்களை, எங்கள் சகோதரிகளைக் கொன்று குவித்த கொடியவனை, புத்தர் விழாவுக்கு அழைத்து வருகின்றீர்கள்.ஏ...பாரதிய ஜனதா கட்சியே, உன் கோர முகத்தை நாங்கள் அம்பலப் படுத்துகின்றோம். இந்துக்களுக்காக நீ கட்சி நடத்துகிறாயா?

Wednesday, July 17, 2013

சாஞ்சி அறப்போர்-பகுதி 1

ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சே, மத்தியப் பிர தேசம் -சாஞ்சிக்கு வருவதைக் கண்டித்து, கருப்புக்கொடி அறப்போர் நடத்திட, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சாஞ்சிக்கு அணிவகுத்துச்
சென்ற கழகத்தோழர்கள் 23.09.2012 அன்று சென்னை வந்தடைந்தனர். பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை....

அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே,

பேரறிஞர் அண்ணா அவர்களின் சதுக்கத்தில், சரியாக ஏழு நாள்களுக்கு முன்பு, அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளாம் செப்டெம்பர் 17 அன்று,அந்தி
சாய் வதற்கு முன்பாக, இதே இடத்தில் சூளுரைத்து, நானும், ஆயிரத்துக்கும் மேற் பட்ட கழகத்தின் கண்மணிகளும், தமிழ் ஈழ விடியலுக்காக ஏங்குகின்ற தமிழ் உணர்வாளர்களும், மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில், புத்தருடைய
போதனைகளைப் பரப்ப அமைக்கப்படுகின்ற ஆராய்ச்சிக் கல்லூரிக்கு அடிக் கல் நாட்டுவதற்கு,தமிழ் இனப் படுகொலை செய்த, இலங்கையின் சிங்கள அதிபர், மகிந்த ராஜபக்சே வருவதை எதிர்த்துப் போராடப் புறப்பட்டுச் சென் றோம்.