19.7.2006 அன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தில்லி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். 25 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார்.
பிரதமரிடம் அவர் அளித்த கோரிக்கை, மனுவின் விவரம் .
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக, இலங்கை அரசால்
ஏவிவிடப்பட்டு உள்ள, ஆயுதப் படையின் திட்டமிட்ட இனப்படுகொலைத்
தாக்குதல்களால், இலங்கை வாழ் தமிழர்கள் சொல்லொணத் துயரத்துக்கும்,
துன்பத்துக்கும் ஆளாகி உள்ளனர். இதுகுறித்த நிகடிநவுகளைத் தங்கள்
கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.