நாட்டின் வளர்ச்சியை நாடாத காங்கிரஸ் ஆட்சி!
இந்திய வரலாற்றில் அதிகமான ஊழலைச் செய்து சாதனை படைத்த அரசு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும். 2ஜி,
ஆதர்ஷ், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள், நிலக்கரி ஒதுக்கீடு,
ஹெலிகாப்டர் பேரம் என பல ஊழல்களைப் புரிந்து, மக்கள் பணம் கொள்ளை போவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணமாகும்.
ஊழலில் வளர்ச்சியைக் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டின்
பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டவே இல்லை. நாட்டின் நிதிப்பற் றாக்குறை 4.89 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பணவீக்கமோ ஏழு சதத் தைத் தொடுகின்றது. உணவுப் பொருட்களின் விலை உயர்வோ ஆறு சதம். ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு 60 ரூபாயைத் தொடும் நிலையில் மதிப்பு இழந்துள்ளது என்கின்றது ஒரு செய்தி.