Showing posts with label தொழில் சங்கம். Show all posts
Showing posts with label தொழில் சங்கம். Show all posts

Sunday, October 20, 2013

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடுக-வைகோ



அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ்  உடனே வழங்கிடுக! #வைகோ வலியுறுத்தல்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1,45,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய ஊதிய உயர்வானது மூன்றாண் டு களுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி ஒப்பந்தம் செய்யப் பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2013 ஆகஸ்டு மாதத்துடன் முடிந்துவிட்டது. என்றாலும் தமிழக அரசும், போக்குவ ரத்துக் கழக நிர்வாகங்களும் இதுவரை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காதது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Thursday, October 3, 2013

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ம.தொ.மு. கொடி உயர்ந்தது!

#வைகோ வின் திருக்கரத்தால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ம.தொ.மு கொடி உயர்ந்தது!

திராவிட இயக்கத்தில் தொழிலாளர்களின் பங்கு எத்தகையது என்பதை இந்த நாடறியும். ஆளுங்கட்சியாக ஒரு இயக்கம் இருக்கும்பொழுது பலனை எதிர் பார்த்து வரும் வேடந்தாங்கல் பறவைகள் போலல்லாமல், ஒட்டியும் ஆம்ப லும் போல இருக்கும் தொழிலாளர்கள்தான் அந்தக் காலக் கட்டங்களில் உணர் வுபூர்வமாக இயக்கத்திற்குப் பணியாற்றி, ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலாளர்களை அசைத்துப்பார்க்க முயன்ற ஆளுங்கட்சிகள் தோல்வியைத் தான் சந்தித்து இருக்கின்றன.

Saturday, August 31, 2013

தொழிற்சங்க தொடக்கவிழா

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மதிமுக தொழிற்சங்க தொடக்கவிழா வரும் 2ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ பங்கேற்கிறார் என்று மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையங்களில் மதிமுக சார்பில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கங்கள் துவங்கப்படுகிறது.