Showing posts with label தொழிலாளர்கள். Show all posts
Showing posts with label தொழிலாளர்கள். Show all posts

Sunday, October 20, 2013

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடுக-வைகோ



அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ்  உடனே வழங்கிடுக! #வைகோ வலியுறுத்தல்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1,45,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய ஊதிய உயர்வானது மூன்றாண் டு களுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி ஒப்பந்தம் செய்யப் பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2013 ஆகஸ்டு மாதத்துடன் முடிந்துவிட்டது. என்றாலும் தமிழக அரசும், போக்குவ ரத்துக் கழக நிர்வாகங்களும் இதுவரை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காதது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.