Showing posts with label குன்னூர். Show all posts
Showing posts with label குன்னூர். Show all posts

Wednesday, June 26, 2013

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 3

கூட்டுக் குற்றவாளி இந்தியா

அவனை இங்கே அழைத்து வருவதற்கு என்ன காரணம்? அந்தப் படுகொலை களுக்கு இந்திய அரசும் உடந்தையான கூட்டுக் குற்றவாளி. அதுதான் காரணம். இவர்கள்தாம் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள்; ஆயிரம் கோடிப் பணம் கொடுத்தார்கள்; கொத்துக்குண்டுகளை வீசுவதற்கு உடந்தையாக இருந்தார் கள்; உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி போரை இயக்கினார்கள்.

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற கொலைகாரனை, காமன்வெல்த் போட்டிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கொண்டு வந்து விருந்து வைத்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்த நேரத்தில் நீ அவனை இங்கே அழைத்து வந்து பரிவட்டம் கட்டினாய்.அவனை இங்கே அழைத்து வராதே என்றோம். அதையும் மீறி அழைத்து வந்தாய். 1200 தோழர் களோடு, மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய சாத்புரா மலைச் சரிவுகளிலே வந்து போராட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்தாய். திருப்பதி எங்கள் தமிழகத்தின் பூர் வீக மண். இந்தியாவுக்கு உள்ளே அவன் எங்கே வந்தாலும், தில்லியில் பிரதமர் வீட்டை முற்றுகை இடுவோம் என்று அறிவித்து முற்றுகை இட்டோம். தில்லிக்கு வராமல் கட்டாக் வழியாக பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு போனாய்.

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 2

அஞ்ச மாட்டோம்

இந்திய இராணுவத்தின் பயிற்சிக் கல்லூரியை முற்றுகை இடுவதாக நாங்கள் அறிவித்தோம்.தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதற்குப் பிறகு, 29 நாள்கள் கழித்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கின்றாய்; அடுத்து மேலும் ஏழு சிங் கள இராணுவத்தினரை இங்கே பயிற்சிக்கு அழைத்து வருவதற்கு நீ திட்டம் வகுத்து இருக்கின்றாய்.

வெலிங்டனில் உள்ள இராணுவத்தினருள், தாய்த் தமிழகத்தின் மான உணர்வு உள்ள தமிழ் இளைஞர்களும் இருக்கின்றார்கள். எங்களுடைய இந்த உரைகள், அவர்களுடைய செவிகளுக்குப் போய்ச் சேரும்.

Tuesday, June 25, 2013

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 1

வெலிங்டனில் இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியா?
அல்லது, கொலைகாரன் இராஜபக்சேவுக்குக்
குற்றேவல் புரியும் கூடாரமா?
குன்னூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி!


கொலைவாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா

என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை, மான உணர்வு உள்ள தமிழர்கள் தம் நெஞ்சில் ஏந்தி, தமிழ்க்குலப் பகைவர்களை இனி இந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம்; கேடு கெட்ட மத்திய அரசை எச்சரிக்கின்றோம் என்கின்ற வகை யில், பல்லாயிரக்கணக்கில் குன்னூரில் திரண்டு இருக்கின்றீர்கள்.

கோவையில், மேட்டுப்பாளையத்தில், குன்னூரில், கூடலூரில் என இந்த நீல கிரிப் பகுதி முழுவதுமே பலத்த மழை பெய்து கொண்டு இருக்கின்றது. அதற்கு நடுவிலும், கொலைகாரச் சிங்களவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டு விட்டார் கள்; எனவே, அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்ற செய்திக்குப் பின்னரும், உணர்ச்சிப் பெருக்கோடு இங்கே திரண்டு இருக்கின்ற
உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.