மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாசற்ற அமைப்பை இரு பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,மக்கள் சமுத்திரமாய் அது உருவெடுத்து, மாநாடுகள், இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் என பல களங்கள் கண்டு, காயங்களையும் பெற்று, இன உணர்வு என்னும் தீ பந்தத்தைத் தாங்கிய அரசியல் தொடர் ஓட்டத்தில்,பல போராட்டக்களங்களில் முந்தி நிற்பதும், முத லில் இருப்பதும் நமது இயக்கம் என்ற பெருமையைப்பெற்றுத் தந்த பெருமகன் தலைவர் #வைகோ. அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்த இவரால் ஆன் மிகத்தைப் பற்றி எப்படி பேச முடிகிறது? நித்தமும் சோர்வின்றிப் பயணிக்கும் இவரால் எப்படி இலக்கியத் தளங்களில் அச்சுப் பிசகாது உரையாற்ற முடிகின் றது? புள்ளி விபரங்களை அடுக்கடுக்காக வைத்து விவாதிக்கும் ஆற்றல், வி னைத் திட்பம், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத் தில் உறுதி என்ற மூன்றையும் கடைபிடிக்கும் அறவாழ்வு என தலைவர் வைகோ வின் அரசியல் பயணம் தியாகம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகளாகும்.
Showing posts with label காந்திய மக்கள் இயக்கம். Show all posts
Showing posts with label காந்திய மக்கள் இயக்கம். Show all posts
Thursday, October 31, 2013
Sunday, October 20, 2013
மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -2
காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர் கள் ஆற்றிய உரை பகுதி 1 தொடர்ச்சி....
அமைச்சரவை முடிவு முட்டாள்தனம்
அஜய் மேக்கன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களுள் ஒருவர். அவர் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவசரச் சட்டம் நூற் றுக்கு நூறு சரி என்கிறார்.அதேபோலத்தான் கபில் சிபலும், இது மிகச் சரியான சட்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அதைச் சரியாகப் படிக்கா மல், நுனிப்புல் மேய்ந்தவர்கள் தான் எதிர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிறார்.அமைச்சர்கள் எல்லாம் பல்வேறு இடங்களில் ஆதரித்துப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.
Saturday, October 19, 2013
மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -1
தண்டனைக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்க முயன்ற, ஊழல் காங் கிரஸ் அரசை மக்கள் தண்டிப்பார்கள்!
மதுரை - காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் #வைகோ
காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர் கள் ஆற்றிய உரை வருமாறு:
மதுரை மாநகரில், பிரம்மாண்டமான கூட்டங்கள்பலவற்றை நான் பார்த்து இருக்கின்றேன். ஆனால், இப்படி உணர்ச்சிமயமான ஒரு கூட்டத்தை மிக அபூர் வமாகத்தான் மதுரை சந்தித்து இருக்கின்றது.
Monday, October 14, 2013
களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 3
கச்சத்தீவு யார் சொத்து?
கச்சத் தீவு எவனுடையது. மோதிலால் நேரு தானாகச் சம்பாதித்து, தான் சம்பா தித்த பணத்தில் வாங்கியதுதான் ஆனந்த பவனம். அந்த ஆனந்த பவனத்தை, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்துகிறபொழுது உப்புச் சத்தியாகிரகம் நடத்தி ஒரு ஆட்சியை மாற்றிவிட முடியுமா? என்று மோதிலால் நேரு சிரித் தார். ஆனால், காந்தி தொடங்கிய அந்தப் பயணத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தார்கள். இந்தத் தேசமே அவர் பின்னால் நின்றது. பார்த்து வியந்தார்கள்.
அந்த மனிதனுடைய அரசியல் வியூகத்தை உணர்ந்து, என்னுடைய சம்பாத்தி யத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆனந்த பவனத்தையே நான் தேசத்திற்கு அர்ப் பணிக்கிறேன் என்று மோதிலால் நேரு சொன்னார். அது சரி,அது அவர் சம்பா தித்தது. கச்சத் தீவு என்ன நேருவின் குடும்பம் சம்பாதித்த சொத்தா?மோதிலால் நேரு சம்பாதித்து கச்சத் தீவை நேருவுக்கு வைத்துவிட்டுப் போனாரா? நேரு அதை அப்படியே எடுத்துப் பாதுகாத்து மகள் இந்திரா காந்தியிடம் கொடுத்து விட்டுப் போனரா?இந்திராகாந்தி தன்னிடம் இருக்கும் சொந்தச் சொத்து கச்சத் தீவு என்று சிறிமா வோ பண்டாரநாயகாவுக்கு சீதனமாக எடுத்துக்கொடுத்தா ரே, யார் சொத்து? சேது சமஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்து இல்லையா அது?
Sunday, October 13, 2013
களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 2
வித்தியாசமானவர்கள்
முதலில் மூன்று பேர் ஒன்றாக நில்லுங்கள். நாங்கள் அதற்கு மேடை போடுகி றோம். திருப்பூரில் என் நண்பர்கள் தெருத் தெருவாக துண்டு ஏந்தி வசூலித்து பிரம்மாண்டமாக ஒரு கூட்டத்தை நடத்தினோம். நான் சொன்ன அடுத்த கண மே வைகோ மிகுந்த விருப்பத்தோடு மேடைக்கு வந்தார். எந்தத் தயக்கமும் இல்லை.அண்ணே,இடதுசாரிகளோடு நானும் சேர்ந்து ஒரு மாற்று அரசியலை
உருவாக்குவது என்றால், இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கிறது?வரு கிறேன் என்றார். உங்களிடம் நான் வந்து பேசினேன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டுகள் வித்தியாச மானவர்கள்.அவர்கள் மண்ணில் வலம் வருவதைவிட,விண் ணிலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களே என்பதில்தான் எனக்கு வருத்தம்.
Saturday, October 12, 2013
களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 1
களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்! தமிழ்ச் சமுதாயத் தின் நலன் காப்போம்!
மதுரை மாநாட்டில் தமிழருவி மணியன் பேச்சு காந்திய மக்கள் இயக்கத்தின்
நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
வணக்கத்திற்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளரும், 2016 இல் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
மக்களின் பேராதரவோடு பெரு வெற்றியைப் பெற்று, கோட்டையில் முதல்வ ராக வீற்றிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ள, நெறிசார்ந்த தூய்மையான அகத்திலும் புறத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத, எந்த மனிதனாலும் எதைக் கொடுத் தும் விலைக்கு வாங்க முடியாத, யாருக்கும் தரகுவேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத, வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)