முதல் அமைச்சர் மகனுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம்...
முத்துக்குமார் மலர்த்தூணுக்கு அனுமதி மறுப்பு!
இது என்ன தமிழ்நாடா?
ராஜபக்சே ஆளும் கண்டி அனுராதபுரமா?
கருணாநிதிக்கு வைகோ கேள்வி
ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட 16 தியாகி க ளின் முதலாம் ஆண்டு புகழ் அஞ்சலிக் கூட்டம் ‘இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் சென்னையில் 29.01.2010 அன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னால், உலகமெலாம் வாழுகின்ற தமிழர்கள்,
சூறைக்காற்றிலே சிக்கிய மரக்கலம் திசை தெரியாமல், கடலில் பொங்கி எழு கின்ற அலைகளுக்கு நடுவே தடுமாறித் தவிப்பதைப் போல, துன்பப் புயலில்
தவித்துக்கொண்டு இருந்தோம். சிங்களவர்களின் கொடூரத் தாக்குதலில் பல் லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு இருந்த துயரமான நேரத்தில், இந்த இருளில் வெளிச்சமே தெரியாமல் போய்விடுமோ? என்று கவலை மூண்டு இருந்த வேளையில், இதற்கு ஏதாவது ஒரு தீர்வு அமை யாதா? தமிழர்களின் மரண ஓலம் நிற்காதா? சாக்காட்டில் தூக்கி எறியப்பட்ட