#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008
இதற்குப்பின்னர் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவ ரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத் துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர்.அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. பூலித்தேவன் பாடிய பாடல்கூட இருக்கிறது. அருமையான பாடல். சிவனை நினைத்துப் பாடிய பாடல்.
இதோ அந்தப் பாடலைச் சொல்கிறேன்.
பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே - சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி