Showing posts with label புதுக்கோட் டை. Show all posts
Showing posts with label புதுக்கோட் டை. Show all posts

Monday, May 13, 2013

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.


மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 1 தொடர்ச்சி ....

நான் குழந்தைகளைப் பற்றிக்கவலைப்படுகிறேன். மது எனும் கொடிய அரக் கனின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு ஏறத்தாழ 1130 கிலோ மீட் டர் தொலைவு இந்த மூன்று கட்ட நடைப்பயணத்தில் கோடிக்கணக்கான மக் களைச் சந்தித்திருக்கிறேன். அதில் பெரும் பாலும் தாய்மார்கள். கைக் குழந் தையோடு நெருப்பு வெயிலில் கால்களில் செருப்பு இல்லாமல் கால் கடுக்கக் காத்திருந்ததைக் கண்டு பதறிப்போனவனாக, தாயே நீங்கள் ஏன் இங்கு நிற் கிறீர்கள்? என்று கேட்ட போது, உங்களைப் பார்ப்பதற்காகத் தான் நிற்கிறோம். எங்கள் பிள்ளைகள், குழந்தைகள், எங்கள் குடும்பம் பத்திரமாக இருக்க வேண் டும். இந்த மதுவின் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற மதுக்கடைகளை
மூட வேண்டும் என்பதற்காக நீங்கள் நடந்து வருவதைப் பார்ப்பதற்கு காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று அந்தத் தாய்மார்கள் சொன்னார்கள்.அந்த மதிய வேளை வெயிலில் களைப்பும் சோர்வும் என்னை ஆட்கொள்ள முயன்றாலும், அந்தப் பச்சிளங்குழந்தைகளுடன் அந்த தாய்மார்கள் வழிநெடுக நிற்பதைப் பார்க் கிறபோது, என் களைப்பெல்லாம் பறந்துபோய்விடும்.

Wednesday, May 8, 2013

இனி, மத்தியில் ஒரு கட்சி ஆட்சி வரவே வராது.

ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட் டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கடந்து வந்துள்ள பாதையை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நமக்கு உரிய இடத்தை தமிழக மக்கள் தந்துள்ளனர்.

தமிழக மக்கள் நம்மை அக்னி பரீட்சை கொண்டு பார்த்துள்ளனர். இந்த இயக் கம் ஆரம்பிக்கப்பட்டு பல துயர சம்பவங்கள், இழப்புகள் மற்றும் அடிகளை சந்தித்து வந்துள்ளது.