காமன்வெல்த் அமைப்பின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட்டால், அந்த அமைப்பே குழிதோண்டிப் புதைக்கப்படும்!
கொழும்பில் மாநாட்டை நடத் தாதே!
சென்னைக் கருத்தரங்கில் #வைகோ
தமிழ் ஈழத்துக்கான மாணவர்கள் போராட்டக்குழுவும், சேவ் தமிழ் இயக்கமும் இணைந்து,07.09.2013 அன்று சென்னையில் நடத்திய கருத்தரங்கில்,மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....
நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில்,ஒரு பேரழிவு ஏற்பட்டு பெருங் கவலை சூழ்ந்து இருந்த நேரத்தில், இளைஞர் உலகம், இனி நாங்கள் கிளர்ச்சிக் கொடி ஏந்துகிறோம்;ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி கேட்கிறோம்;கொடியவன் ராஜபக்சேயைக் குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு, அகிலத்தின் மனசாட்சியின்
கதவுகளைத் தட்டுவதற்கு, தமிழகத்து வீதிகளில் திரளுகிறோம் என்று போராட் டக் களம் அமைத்த மாணவச் செல்வங்கள்.