Showing posts with label பகத்சிங். Show all posts
Showing posts with label பகத்சிங். Show all posts

Tuesday, September 24, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 17

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

நான் இந்த நேரத்தில் பதிவுசெய்யவிரும்புகிறேன். இந்தப் போரில் புலிகள் பின் னடைவதாகவும் எல்லா இடங்களையும் கைப்பற்றுவதாகவும் சரத் பொன் சேகா சொல்கிறான். இனி அவர்கள் வெளியே ஓட்டம் பிடிக்க வேண்டியது தான். நாங்கள் கைப்பற்றி விடுவோம் என்கிறான். இவ்வளவும் நடத்திக்கொண் டிருக்கின்ற சரத்பொன்சேகாவுக்கு நீங்கள் 500 மில்லியன் டாலர் கடன் கொடுத் தீர்கள். அடுத்தவாரம் பாகிஸ்தான் சென்று ஆயுதம் வாங்கிவிட்டான். எங்கள் வரிப்பணத்தில் இருந்து பணம் கொடுப்பீர்கள்.அவன் வாங்கிக் கொண்டு பாகிஸ்தானிடம் ஆயுதம் வாங்கி எங்கள் மக்களைக் கொல்வான். அதற்கு ஒரு அரசு இங்கே. அந்த அரசில் பங்கு வகிக்கின்ற தி.மு.க.

Monday, September 23, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 16

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இந்த ஜெகஜாலபுரட்டு வார்த்தைகளை மாற்றி செய்த தவறுகளை அப்படியே மறைப்பது ரொம்ப நாளைக்கு நடக்காது. ரேடார்களைக் கொடுத்தது இந்தியா என்று உங்களுக்குத் தெரியும். ரேடார்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா? ஆயுதம் கொடுத்தது இந்தியா என்பது உங்களுக்குத் தெரியும். ஆயுதங்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா?

Saturday, September 21, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 15

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

நமக்கு உலகத்தில் வேறுநாடுகளில் வீராதிவீரர்கள் தோன்றினால் கைதட்டிப் பழக்கப்பட்டவர்கள். இந்த இனத்தில் பிறந்த ஒருவன் ஒழுக்கத்தால் பண்பால் நேர்மையால் தனிமனித ஒழுக்கத்தால் தன் சாகசத்தால் ஒரு இனத்தை மீட்ப தற்கு களத்தில் நிற்கிறான். அவர்களுடைய போராட்டம் உங்களில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் ஆயுதக் கிளர்ச்சி உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

நான் மத்திய அரசைக் கேட்கிறேன். மாநில அரசைக் கேட்கிறேன். புலிகளின் போர்முறை உங்களுக்கு உடன்பாடல்ல. சரி. அவர்கள் ஆயுதம் ஏந்துவது உங் களுக்கு உடன்பாடு அல்ல.சரி.அவர்கள் துப்பாக்கி ஏந்துவது உங்களுக்கு உடன் பாடு அல்ல சரி. நீங்கள் கைராட்டினமும் தக்கடியும் வைத்துத்தான் நாம் போரா டி வெற்றிபெற்றோம் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் எப்படி ஆயுதம் ஏந்த லாம் என்று சொல்லலாம். அது உங்கள் உரிமை.

Thursday, September 19, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 14

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

முதலில் பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், ‘சுகதேவ் வருகிறேன். இராஜ குரு வருகிறேன். புரட்சி ஓங்குக. இன்குலாப் சிந்தாபாத்’ என்று அந்தத் தூக்குக் கயிற்றை வாயால் எடுத்து முத்தமிட்டார், அதற்குப்பிறகு கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினார்கள். மற்ற இருவரும் அதேபோல ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்களும் அந்தத் தூக்குக்கயிற்றை அணைத்தார்கள்.

Wednesday, September 18, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 13

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பகத் சிங் உடனே, ‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. பிரிட்டிக்ஷ் அரசுக்கும் கருணை பிறந்து விட்டது. அடிமைப்பூச்சிகளாக இன்னும் ஒரு 12 மணி நேரம் இங்கே இருப்பதைவிட, சீக்கிரமாக விடைபெற்றுப் போவது நல்லது என்று எங்களை சீக்கிரமாக அனுப்புகிறார்கள் என்று சொல்கிறார். இதற்குள் இந்தச் செய்தி யைக் கேள்விபட்டு பர்கத் என்கின்ற முடி திருத்துகிற சகோதரன், அவனும் சிறைக்கைதிதான். அவனுடைய லாக்கப்தான் கடைசி. அவன் வரிசையாக ஓடி, எல்லா கொட்டடிக்கும் சென்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கில் போடப்போகிறார்கள் தூக்கில் போடப்போகிறார்கள் என்று சொல்லி விடுகி றான். அனைவருக்கும் தெரிந்து விட்டது.

Tuesday, September 17, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 12

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இதோ இறுதிநேரம் வந்துவிட்டது. தூக்கில் போடப்பட வேண்டிய நாள் 24. 22 ஆம் தேதி வரை ஆணை வரவில்லை. 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிறை யில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஆறு மணிக்குத்தான் கைதிகள் கொட்டடிக்கு உள்ளே செல்ல வேண்டும்.

திடீரென்று 4 மணிக்கு கத்தார் சிங் வந்து, ‘எல்லோரும் அறைக்குச் செல்லுங் கள் அறைக்குச் செல்லுங்கள். நாங்கள் எல்லா பிளாக்கையும் பூட்டப் போகி றோம்’ என்கிறார். எப்பொழுதும் ஆறு மணிக்குத்தான் செல்லைப் பூட்டுவார் கள், இன்றைக்கு 4 மணிக்கே பூட்டப் போகிறோம் என்கிறார்களே என்று ஒரு வருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தலைமை வார்டன்மேல் அனைவருக்கும் மரியாதை. அவர் சொன்னால் சரியாக இருக்கும். அவர் நல்ல மனிதர். எல்லோரும் கொட்டடிக்குள் சென்று விடுகிறார்கள்.

Monday, September 16, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 11

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பகத்சிங்கின் தோழர்களிடம் இருந்து சிறைக்கு ஒருகேள்வி அனுப்பப்படுகிறது “நீ உயிர்வாழ ஆசைப்படுகிறாயா” என்பதே அக்கேள்வி. அதற்கு மார்ச் 22 ஆம் தேதி பகத்சிங் எழுதும் பதில் கடிதமே அவரது கடைசி எழுத்தாகும்.

அதில் பகத்சிங் கூறுகிறார்.

“வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானது. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது.

Thursday, September 12, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 10

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இந்தநேரத்தில் மகாத்மா காந்தி மீது அவர் அப்பாவுக்கு நல்ல மரியாதை. கொஞ்ச நேரத்தில் இதைப் பற்றிப் பேச்சு வருகிறது. பகத்சிங் நினைக்கிறான் அப்பாவை ஏன் கக்ஷ்டப்படுத்த வேண்டும், அவர் காந்தி மேல் ரொம்ப மதிப்பு வைத்து இருக்கிறார். அவரிடம் போய் ஏன் விவாதம் செய்ய வேண்டும் என்று , ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக் கு மகாத்மா காந்தி ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொன்னவுடன், அவர் அப்பா வுக்கு மகன் வாயால் இதைக் கேட்டேனே என்று மகிழ்ச்சி அடைகிறார்.

Wednesday, September 11, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 9

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பண்டித ஜவஹர்லால் நேருவும் - சுபாக்ஷ் சந்திர போசும், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மரண தண்டனையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உண்மையான ஈடுபாட்டோடு விரும்பினார்கள். இந்த சந்தர்ப்பத்தில் வைஸ்ராய் இர்வினைச் சந்திக்க மகாத்மா காந்தி போனார். என்ன நடந்தது? நான் பேசுவது எல்லாம் ஆவணங்களை வைத்து இருக்கிறேன்.மகாத்மா காந்தி இர்வினுக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார் என் றால்?

Tuesday, September 10, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 8

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

லாகூர் சிறையில் மரணக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்கள். இந்தக் கால கட்டத்தில் அவர் படித்த நூல்கள் ஏராளம் ஏராளம். அவருடைய அறிவுப் பசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை விதவிதமான புத்தகங்கள். கம்யூனிச புத்தகங் கள் அவர் மனதைக் கவர்ந்த புத்தகங்கள். லெனினைப் பற்றிய புத்தகங்கள். மார்க்சியத்தைப் பற்றிய புத்தகங்கள். அதைப் படித்தது மட்டுமல்ல ரொம்ப ஆச் சரியமாக இருக்கிறது. சின்கிலேர் எழுதிய ஒற்றன் என்ற ஒரு நாவல் அது கூட அவர் கேட்கிறார்.

Monday, September 9, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 7

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குண்டு வீசினார்கள். மே 7 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. ஜூன் 12 ஆம் தேதி தீர்ப்பு. ஆயுள் தண்டனை. அந்தமானுக்கே அனுப்பலாம். ஆயுள்தண்டனை வந்து அந்த தண் டனையைத்தான் அனுபவிக்க இருக்கும் என்று கருதுகிற அந்த காலகட்டத் தில், ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றதில் பகத்சிங் குற்றவாளி என்று வழக்கு வருகிறது.

Sunday, September 8, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 6

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

கல்கத்தா காங்கிரஸ் மாநாடு அங்கே நடக்கிறது. அதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அங்கே செல்கிறார் பகத் சிங். சலிப்புத் தட்டுகிறது. அங்கே உள்ள தீர் மானங்கள், நடவடிக்கைகள், சில பேச்சுகள் சலிப்புத் தட்டுகிறது. காங்கிரஸ் மாநாட்டைவிட்டு வெளியே வருகிறார்.அவர் சொல்கிறார்.அப்பொழுது எங்கே செல்வது என்று நான் கருதினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத் துயர வரலாற்றை விவரிக்கின்ற Uncle Toms Cabin என்கின்ற திரைப்படம் நடப்பதைக் கேள்விப்பட்டு, நான் அங்கே சென்றேன்’ என்று பகத்சிங் சொல்கிறார்.

Saturday, September 7, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 5

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பழிக்குப்பழி என்று முடிவெடுத்தபிறகு, அதற்குத் திட்டம் வகுக்கின்ற காலத் தில், ஏற்கனவே ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புச் சற்று மந்த மாக இருந்த நிலைமையில், மீண்டும் எழுச்சி ஊட்டி, புதிய பெயரைச்சேர்த்து, ‘ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோஷியசேன்’ என்ற பெயரை, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேசன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு ஒரு ஆயுதப்பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு சந்திரசேகர் ஆசாத் தலைவர் ஆனார்.

Thursday, September 5, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 4

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பகத் சிங் பிறந்த ஊருக்குப் பெயர் கட்கர் கலான். நான் கண்ணப்பன் அவர்கள், மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கும் பஞ்சாபில் முதல் அமைச்சராக இருந்த அகாலிதள தலைவர் பிரகாக்ஷ் சிங் பாதல் அவர்களின் அழைப்பினை ஏற்று, பகத்சிங் பிறந்த ஊருக்கு சூரிய வெப் பத் தில் இருந்து மின்சாரத்தைத் தருகின்ற திட்டத்தை நீங்கள் வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டதை பெரிய பெருமிதமாகக் கருதி, அந்த திட்டத் துக்கு அனுமதி வழங்கியதால், அடிக்கல் நாட்டுகிற நிகழ்ச்சிக்கு அமைச்ச ரோடு என்னையும் சேர்த்து பிரகாக்ஷ் சிங் பாதல் அழைத்து இருந்தார்.


Wednesday, September 4, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 3

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

அந்த மாவீரன் பகத்சிங் பிறந்தது செப்டம்பர் 28 என்று சொல்பவரும் உண்டு. ஆனால், பலரும் அக்டோபர் 7 என்று பதிவு செய்துள்ள காரணத்தால், அந்த அக்டோபர் 7 என்பது, புரட்சி இயக்கத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் என்பதால், Oh October thy name is Lenin என்று அக்டோபர் 7 ஐ அகிலம் கொண்டாடு கிற காரணத்தால், பெரும்பாலானோரின் கருத்தை ஏற்று, அந்த அக்டோபர் 7 ஆம் நாளையே பகத்சிங்கின் பிறந்த நாளாகக் கருதி, நூற்றாண்டு நிறைவு பெறுகிற நேரத்தில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்துகிறோம்.

Saturday, August 31, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 2

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

அவன் எழுதிய நூல் கையெழுத்துப் பிரதியாக சிறையில் இருந்து வெளியே கடத்தப்பட்டது. அப்படிக் கடத்தப்பட்ட நூல்கள் மொத்தம் ஆறு. மரண தண்ட னைக்குமுன்பு அவர் எழுதிய ஆறு நூல்கள் வெளியே கடத்தப்பட்டன. அதில் ஒன்று நான் ஏன் நாத்திகன். அடுத்தது ‘கனவுலகத்துக்கு ஒரு அறிமுகம்.’ இந்த இரண்டு நூல்கள்தான் கிடைத்தன. இன்றைக்கு இருக்கிறது. அவர் எழுதிய இன்னொரு நூல், ‘இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு.’ கிடைக்க வில்லை, எவரிடமும் இல்லை. ‘சோஷலிச கோட்பாடு’ எனும் நூல் பகத்சிங் எழுதியது கிடைக்கவில்லை. பகத்சிங் தன்னுடைய “சுயசரிதை” என்ற பெய ரில் எழுதிய நூல் கிடைக்கவில்லை. “At the door of Death” மரண வாசலில் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம். அதுவும் கிடைக்கவில்லை.

Thursday, August 29, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 1

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

கனவாகிப்போன கச்சத்தீவு நூலை நான் வெளியிட வேண்டும் என்று ஆரு யிர்ச் சகோதரர் கே.எஸ்.ஆர். கேட்டமாத்திரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி ஏற் பாடு செய்யுங்கள் என்று சொன்னேன். எந்தப் பெயரை உச்சரித்தால் கோடிக் கணக்கான வாலிபர்களின் நாடி நரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற மந்திரச் சொல்லாக அந்தப் பெயர் இருந்ததோ, அந்தப் பெயருக்கு உரியவனான பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, இந்த அக்டோபர் 7 ஆம் தேதியை நாங்கள் தேர்ந்து எடுத்தோம்.

இந்த அக்டோபர் 7 கடந்த ஆண்டில் நூற்றாண்டு விழா தொடக்கம் நடத்தப் படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறுகிற இடம், மண்டபம், நேரம், கலந்து கொள்பவர்களின் பட்டியல் என எல்லாம் அறி விக்கப்பட்டு, ஏடுகளில் செய்தி வந்து, மகானுபாவர் கலந்து கொள்கிற நிகழ்ச் சிக்கு ஏற்றவாறு மண்டபத்தில் கூட்டம் வரவில்லை என்று, அந்தக் கூட்டம் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.