தமிழகத்தைத் தவிக்கவிட இந்திய அரசின் திட்டமிட்ட சதி!
ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்தபோது தண்ணீர் பற்றாக் குறை யில்லாமல் இருந்தது.1953 இல் ஆந்திரா தனிமாநிலமாகப்பிரிந்தது. 1956 இல் மாநிலங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் விளைவாகவே தமிழகம் தண்ணீரை இழக்க நேர்ந்தது.
அறிஞர் அண்ணா ஆசைப்பட்ட (தென்னாடு) திராவிட நாடு மட்டும் அமைந்தி ருக்குமானால், நீர்வளம், நிலவளம், தொழில்வளம், மனித வளம் ஆகிய அனைத்து வளங்களும் பொருந்திய நாடாக அமைந்திருக்கும்.