Showing posts with label ஜீவா. Show all posts
Showing posts with label ஜீவா. Show all posts

Saturday, August 24, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 4

சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாகப் பேசுகிறபோது, அவர்கள் ஒவ்வொரு வரும் இன்றைக்கு எங்கள் தொகுதியில்,இப்பொழுது இருக்கிற நிலைமையில் 3 மருத்துவ மனைகள் திறக்க வேண்டும்; 15 நியாயவிலைக் கடைகள் திறக்க வேண்டும்;10 கஞ்சித் தொட்டிகள் திறக்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு எம்.எல்.ஏ.வருகிறார். இல்லை எங்கள் தொகுதியில் 4 மருத்துவமனை கட்ட வேண்டும். 3 நியாய விலைக்கடைகள் வேண்டும் என்று வரிசையாகப் பேசு கிறார்கள்.

முதலமைச்சர் ராஜாஜி முகம்சுளிக்கிறார்.அவர் சொல்கிறார்: இன்று விவாதத் தில் பேசிய ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதிக்கு அது வேண்டும்,இது வேண்டும் என்றே பேசிக்கொண்டு இருந்தார்கள்.இது வருந்தத்தக்க நிலைமை. தொகுதி கண்ணோட்டம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்க ளுக்கு பரந்து விரிந்த இந்த மாகாணத்தைப் பற்றிய கண்ணோட்டம் இல்லா மல்போயிற்றே’ என்று குறைபட்டுக் கொள்கிறார்.எம்.எல்.ஏ.க்களுக்கு வருத் தம். அன்றைய சட்டசபைக்கூட்டம் முடிந்து விட்டது.

Wednesday, August 21, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 3

புலிகளைப் போன்றவர்களை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்றவர் ஜீவா!

யாரை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் தெரியுமா ஜீவா? புலிகளை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இங்கே சுருக்கு எழுத்தாளர்கள் வந்து இருக்கிறார்கள். அரசாங்கத்தின் ஒற்றர் கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டுப் போகிறபோது ஜீவாவின் பெருமைகளில் மனமெல்லாம் பூரித்துத்தான் போவார்கள்.அவர்கள் நமது நண்பர்கள் தான். ஆனாலும் கடமை இருக்கிறது அல்லவா? வைகோ அல்லவா பேசுகிறான் பூதப்பாண்டியில்.

Thursday, August 15, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 2

சிறாவயலில் குருகுலத்தில் பணி ஆற்றுகிறார். அங்கிருந்து நாச்சியார் கோவி லுக்கும், கோட்டையூருக்கும் செல்கிறார்.

1927 ஆம் ஆண்டு. ஏறத்தாழ 21 ஆவது வயது. அங்கேதான் காந்தியாரைச் சந்திக்
கிறார். காந்தியார் ஜீவானந்தத்திடம் பேசுகிறபோது, ‘என்ன சொத்து? என்று
கேட்கிறார். ‘இந்தத் தாய் நாடு தான் என்னுடைய சொத்து’ என்றார் ஜீவா.அதற் குக் காந்தி, ‘இல்லை யில்லை; உன்னைப் போன்றவர்கள்தான் இந்த நாட்டுக் குச் சொத்து’ என்றார்.

அப்படிப்பட்ட தலைவன் பிறந்த மண்ணிலே, அவரது பிறந்த நாள் விழாவில் பேசுவதைக் கடமையாகக் கருதிப் பேசுகிறேன். ‘பூதப்பாண்டி’ என்கிற இந்த ஊருக்குப் பெருமையும்,புகழும் தேடித்தந்த மாமனிதன் ஜீவா. தன் வாழ்நாள் முழுமையும் தன்னலம் அற்று, இலட்சியத்துக்காகவே வாழ்ந்து மனிதநேயத் தின் சிகரமாக வாழ்ந்து,மண்ணின் விடுதலைக்கு, மொழியின் விடுதலைக்கு, இனத்தின் விடுதலைக்கு,ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு, சமூக நீதிக்குப் பாடுபட்ட உணர்வு காரணமாகத்தான் தந்தை பெரியாரை இவர் கவர்ந்தார். தந்தை பெரியார் இவரைக் கவர்ந்தார்.

Wednesday, August 14, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 1

தோழர் ஜீவா நேர்மையின் இமயம்!



ஜீவா பிறந்த நாள் விழாவில் #வைகோ
பொது உடைமை இயக்கத் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 103ஆம் பிறந்த நாள் விழா 21.8.2009 அன்று நாகர்கோவில் பூதப்பாண்டியில் நடை பெற் றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பூதப்பாண்டிக் கிளை ஆகியவற்றின் சார் பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பொன்னீலன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவரது உரை...

‘ஜீவாவின் பிறந்த நாள் விழா பூதப்பாண்டியில் நடைபெற இருக்கிறது; அதில் உரையாற்றுவதற்கு அழைக்கிறார்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தார்’ என்று என்னுடைய அருமைத்தம்பி பொறியாளர் இலக்குமணன் அவர்கள் தொலைபேசியில் தெரிவித்த மறுநிமிடத்தில், ‘கட்டாயம் நான் வருகிறேன்,