காமன்வெல்த் மாநாடு குறித்த சட்டசபைத் தீர்மானம், முழு மனநிறைவு தர வில்லை! #வைகோ அறிக்கை
காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைமைகளின் கூட்டம், இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால், இந்திய அரசு காமன்வெல்த் செயலா ளர் நாயகம் கமலேஷ் சர்மா எனும் இந்தியரைக் கொண்டு, மிகத் தீவிரமான வேலைகளில் ஈடுபட்டதால், கொடூரமான தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு நிர்வகிக்கும் இலங்கை நாட்டில் அம்மாநாடு, வருகின்ற நவம்பர் 17,18 தேதிகளில் நடைபெற உள்ளது.
ஈழத் தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளியான,காங்கிரஸ் தலை மை தாங்கும் இந்திய அரசு, இனக்கொலை குறித்த நீதி விசாரணை வரவிடா மல் தடுப்பதற்காக, இந்த வஞ்சகமான சதிச்செயலில் ஈடுபட்டது. ஏனெனில், எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடக்கிறதோ, அந்தநாட்டின் அதிபரே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பார். எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த மாபாதகன் மகிந்த ராஜபக்சேவை, காமன் வெல்த் அமைப்புக்குத் தலைவராக்கி, தமிழ் இனக்கொலைக் கொடுமையை, விசாரணைக்கு வரவிடாமல் குழிதோண்டிப் புதைப்பதுதான், இந்திய இலங்கை அரசுகளின், கூட்டுச் சதி நோக்கம் ஆகும்.