Showing posts with label ஓவியர் புகழேந்தி. Show all posts
Showing posts with label ஓவியர் புகழேந்தி. Show all posts

Wednesday, May 22, 2013

தமிழ் ஈழத் தாயகம் வரலாற்றுக் கட்டாயம் என்ற உணர்வை உலகத் தமிழர்களின் உள்ளங்களில் தூண்டுவதற்கு புகழேந்தியின் ஓவியங்கள் துணை நிற்கும்!

ஓவியர் புகழேந்தியின் ஈழத்தின் துயர்கூறும் ஓவியக் கண்காட்சி நெல்லை யில் கடந்த 2009 ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் நடைபெற்றது. கண்காட்சியைத் தொடங்கி வைத்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய சிறப்பு உரை யில் இருந்து...

காலத்தால் அழியாத புகழையும்,நற்பெயரையும் தன்னுடைய தூரிகையிலும், தனக்குப்பெற்றோர் சூட்டி உள்ள பெயரிலும் ஏந்தி உள்ள தமிழ் இனத்தின் சொத் து களுள் ஒன்றாகப் பாதுகாக்கப்பட வேண்டிய எனது ஆருயிர்ச் சகோதரர் புகழேந்தி அவர்கள் தீட்டிய நெஞ்சை உலுக்கும் போர்முகங்கள் சித்திரங்களின்
காட்சிக்கூடத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன்.