Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Tuesday, October 15, 2013

ஈகை உணர்வால் வாகை சூடுவோம்! வைகோ

ஈகை உணர்வால் வாகை சூடுவோம்! #வைகோ 

ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டி கையாக இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி,தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை,நபி இப் ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றவும் உலகெங்கும் நினைவு கூரப் படுகின்றது. இஸலாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது இந்த நிகழ்வு.