Showing posts with label மும்பை. Show all posts
Showing posts with label மும்பை. Show all posts

Wednesday, October 30, 2013

அந்த ஒரு நாள்!

தொலைபேசி மணி ஒலித்தது, நம் தோழர் தமிழ்மணி பாலாவிடம் இருந்து
வந்த அந்தத் தகவல், “தலைவர் #வைகோ மார்ச் 6 ஆம் தேதி மும்பைக்கு வரு கிறார்.ஈழத் தமிழர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள”, மிகவும் மகிழ்ந் தேன்.ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் அவர்களை அருகில் இருந்து தரிசிக்கிற
வாய்ப்பைப் பெற்றதை எண்ணியும் விரைவில் அடுத்து தரிசிக்க காத்திருகி றேன் என்று எண்ணியும்.இதற்கு காரணம் உண்டு. எப்படி இருந்தாலும் தலை வர் மார்ச் 5 மும்பை வந்துவிடுவார். நான் என் பிறந்தநாள் அன்றே காண முடி யும் என்று மகிழ்ந்தேன்.3 நாட்கள் உருண்டோடின தலைவர் வருகிற தேதி அறி விக்கப் படாமல் ஒத்திப்போனது.

ஒருவாரம் கழித்து எனக்கு தகவல் கிடைத்தது. தலைவர் வருகிற மார்ச் 20 வரு கிறார் என்று. செம்பூரில் சர்வ தமிழ் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்,
எப்படி இந்தப் போராட்டத்தை நடத்துவது. எந்தத் தீர்மானத்தை முன்வைப்பது என்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு,சுதந்திர தமிழ் ஈழம் அதற்கு பொதுவாக் கெடுப்பு தான் தீர்வு.