Showing posts with label மாற்றுத்திறனாளி. Show all posts
Showing posts with label மாற்றுத்திறனாளி. Show all posts

Tuesday, October 29, 2013

மதிமுக நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி , அயன்வடமலாபுரத்தில் #மதிமுக சார்பில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், பாட்டு போட்டி நடந்தது. 

இப்போட்டியில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 167 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ.1000ம்,  2வது பரிசாக ரூ.701ம், 3வது பரிசாக ரூ.501ம் வழங்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வேஷ்டி, கைலி, சேலைகள், சட்டைகள் வழங்கப் பட்டது.