வாராது வந்த மாமணியை,
கருத்துக் கருவூலக் களஞ்சியத்தை,
இயற்கை பறித்துச் சென்றதே!
அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு; #வைகோ இரங்கல் உரை
திராவிட இயக்கம் ஈடு இணையற்ற கருத்துக்கருவூலக் களஞ்சியத்தை இழந்து விட்டது;
தமிழ் இனம் எழுத்தாலும், பேச்சாலும், தனக்கு அரண் அமைத்துத் தருகின்ற வலிய படைக்கருவியை இழந்து விட்டது;
நட்புச் சுற்றம் நெஞ்சால் உயர்வாக நேசித்த ஒரு நண்பனை இழந்து விட்டது;