தலைவர் வைகோ அவர்களின் ஆசியோடு, ஜப்பான் நாட்டில் 16 நாள்களும், ஹாங்காங், மகாவ்,சீனாவில் ஒரு வார காலமும் சுற்றுப்பயணம் மேற்கொண் டேன். ஜப்பான் நாடு, இந்த உலகில் உள்ள வேறொரு உலகம் என்பதை நேரில் கண்டேன்.ஜப்பான் பயண அனுபவங்களை,சங்கொலி வாசகர்களோடுபகிர்ந்து கொள்ளுமாறு தலைவர் வைகோ அவர்கள் கூறினார்கள்.தம்பி ஜெயசீலனோ டு நிகழ்த்திய உரையாடலை ஏற்கனவே பதிவு செய்து உள்ளேன். இந்த இதழில், பரமக்குடி குன்றாளன் அவர்களுடைய கருத்துகள் இடம் பெறுகின்றன. உரை யாடல்கள் தவிர, ஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும், அவ்வப்போது சங் கொலியில் இடம் பெறும்.