கோவில்பட்டி கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் ம.தி.மு.க. வெற்றி
நகராட்சி பள்ளியில் 4 வாக்கு பதிவு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்றது. மொத்தம் 2004 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் எண்ணும் பணி நேற்று நகராட்சி பள்ளியில் வைத்து நடைபெற்றது. மதிமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ் தலைமையிலான அணியினர் முன்னனி யில் இருந்தனர், இறுதியில் ஆர்.எஸ். ரமேஸ் தலைமையிலான அணியினர் அனைவரும் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.