இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; பொருளாதார வீழ்ச்சி; உணர்த்தும் உண்மைகள்!
பொருளாதாரப் புலிகள் என்று வர்ணிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பதவியை விட்டு வெளியேறும் போது, ‘நாடு திவால்’ ஆகி “மஞ்சள் கடுதாசி” கொடுக்க வேண்டிய நிலைமைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டு விட் டது. விடுதலை பெற்ற இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை வகித்த காங்கிரஸ் கட்சி,இந்தியப் பொருளாதாரத்தை மலை உச்சியிலிருந்து உருட் டித் தள்ளி இருக்கின்றது.